இளைய தளபதி விஜய் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் புலி. இப்படத்தின் படப்பிடிப்பு தலகோணத்தில் அதிரவைக்கும் செட் ஒன்றை போட்டு மிக வேகமாக வளர்ந்து வருகிறது .இப்படப்பிடிப்பு இந்த வாரத்துக்குள் முடிந்து விடும். மேலும் பாடல் காட்சிக்காக அடுத்த வாரம் கம்போடியா போக உள்ளது படக்குழு.இந்நிலையில் விஜய் எந்த படத்திலும் செய்யாத விஷயத்தை புலி படத்துக்காக செய்துள்ளார் . அதாவது தனது திரையுலக வாழ்கையில் ஞாயிற்றுக்கிழமைகளில் படப்பிடிப்பில் கலந்து கொண்டதே கிடையாது, ஆனால் புலி படத்துக்காக ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பரவாயில்லை ஒரு நாள் விடாமல் தொடர்ந்து 3 வாரங்கள் படப்பிடிப்பு கலந்து கொண்டு உள்ளாராம்.விஜய்யின் இந்த ஈடுபாட்டையும் மற்றும் உழைப்பையும் கண்டு புலி படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

Post a Comment

 
Top