“சமுதாயத்தில் அச்சம் இல்லாமல் பல விஷயங்கள் நடக்கின்றன. அதை அச்சம் இல்லாமல் ஹீரோ எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதுதான்  ‘அச்சமின்றி’ படத்தின் ஸ்டோரி” என்று சஸ்பென்ஸ் உடைக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி.

இவர் ‘என்னமோ நடக்குது’ ஹிட்டுக்குப் பிறகு மீண்டும் விஜய் வசந்துடன் கை கோர்த்திருக்கிறார்.‘‘விஜய் வசந்த் கேரியரில் இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். முந்தைய படங்களில் அப்பாவியாக வந்தவர் இதில் ஆக்ஷனுக்கு மாறியிருக்கிறார்.

முதல் பாதியில் காமெடியிலும், இரண்டாவது பாதியில் ஆக்ஷனிலும் வெரைட்டி காட்டியிருக்கிறார். கெட்-அப்பிலும் பெரிய மாற்றத்தைப் பார்க்கலாம். அவரைப் பார்க்கும்போது ‘சத்யா’ கமலைப் பார்த்த மாதிரி இருக்கும். அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட நன்றாக தமிழ் பேசி அசத்தியிருக்கிறார்.

விஜய் வசந்துக்கு அடுத்தபடியாக படத்துல முக்கியமான ரோலில் சமுத்திரக்கனி நடிக்கிறார். இந்த மூவரும் வில்லன்களால் வெவ்வேறு பிரச்னைகளால் பாதிப்பு அடைகிறார்கள். மூவரும் சேர்ந்து வில்லனை எப்படி டார்கெட் பண்ணுகிறார்கள் என்பது படத்தோட ஹைலைட். வில்லன்களாக பரத் ரெட்டி, செயகுமார் நடித்திருக்கிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் சரண்யா இருக்கிறார். ஆனால் அம்மா கேரக்டர் இல்லை.

டெக்னீஷியன்கள் சைடிலும் இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன், ஒளிப்பதிவாளர் ஏ.வெங்கடேஷ் என்று எனக்குத் தேவையான வசதிகளை தயாரிப்பாளர் வினோத்குமார் செய்து கொடுத்திருக்கிறார். இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாக இருந்தாலும் சமுதாயத்துக்குத் தேவையான ஒரு கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் ராஜபாண்டி. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=16217&id1=3#sthash.vJtmqNAd.dpuf

Post a Comment

 
Top