மிதுனம்

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் செய்தொழிலில் இறுக்கமான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உங்களின் அசாத்திய துணிச்சலால் அவைகளிலிருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். நண்பர்களுடன் சகஜமாகப் பழகுவீர்கள். எனினும் மனதில் சிறு சஞ்சலங்கள் தொடர்ந்தவண்ணமிருக்கும். பயணங்கள் திருப்தியைத் தரும். உங்கள் பேச்சில் வசீகரம் தென்படும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்தைத் தக்கவைத்துத் கொள்வீர்கள். உங்கள் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். கொடுத்தவாக்கைக் காப்பாற்றுவீர்கள். தேவைக்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்குமாதலால் கடன்களைக் குறித்த காலத்திற்குள் திருப்பிச் செலுத்துவீர்கள்.
நீங்கள் செய்துவரும் தொழிலை உங்கள் நிறைகுறைகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்வீர்கள். பழைய அனுபவங்களும் கைகொடுக்கும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்திருந்த உதவிகள், சலுகைகள் ஆகியவைகள் கிடைக்கும்.
மேலும் அனாவசிய செலவுகள், விரயங்களைக் கட்டுப்படுத்தவும். கடினமான உழைப்புக்கு நடுவில் சரியான நேரத்தில் ஆகாரத்தையும் ஓய்வையும் எடுத்துக் கொள்ளுங்கள். உடலுபாதையால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் உடல்நலம் சீராகும். உங்களுக்கு மறைமுகமாக தொல்லை கொடுத்துவந்த சகோதர சகோதரிகள் அடங்கி விடுவார்கள்.
இந்த ஆண்டில் வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கடன் திரும்பவும் கிடைத்து உங்களை மகிழ்ச்சியிலாழ்த்தும். குடும்பத்தின் தேவைகள் சுலபமாக நிறைவேறும். புதிய முயற்சிகளாலும் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களையும் அனுசரித்துச் செய்வீர்கள். மாற்றுக் கருத்துடையோருக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். புதிய வழிகளில் செயல்பட்டு பாராட்டுகளைப் பெறுவீர்கள். பறிபோன பழைய பதவி இந்த ஆண்டு திரும்பக் கிடைத்து அதில் தன்னம்பிக்கையுடனும் முனைப்புடனும் செயல்பட்டு மைல்கல்லை எட்டும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டு முன்கூட்டியே செய்து முடிப்பார்கள். சில நேரங்களில் இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். பணவரவுக்குத் தடைகள் வராது. எதிர்பார்த்த சம்பள உயர்வு சரியான நேரத்தில் வந்து சேரும். மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறைந்தே காணப்படும். வியாபாரிகள் கொடுக்கல்வாங்கல் விஷயங்களில் சிறு சிக்கல்களைச் சந்திப்பார்கள். மேலும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பார்கள். இதனால் செலவுகள் குறையும். வங்கிக்கடன்கள் கிடைக்கும். சுக சௌகரியங்களை எதிர்பார்க்காமல் உழைத்தால் நலம் பெறுவீர்கள். விற்பனை பிரதிநிதிகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். வியாபாரிகளுக்கு விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காவிட்டாலும் முதலுக்கு மோசம் போகாமல் இருக்கும். நீர்வரத்து அதிகமாக இருக்குமாகையால் நீர்ப்பாசன வகையில் கவனம் செலுத்துவார்கள். கால்நடைகளாலும் நல்ல லாபத்தைக் காண்பார்கள். உடன் உழைப்பவர்களை அனுசரித்துச் செல்லவும்.
அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பணியாற்றுவார்கள். கட்சியில் பழைய எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். சமுதாயத்தில் உங்கள் புகழும் செல்வாக்கும் வளரும். கட்சியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளிலும் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். உங்கள் திறமை பளிச்சிடும். சுறுசுறுப்புடன் பணியாற்றி நற்பெயரெடுப்பீர்கள். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். உற்றார் உறவினர்களிடமும் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவார்கள். உடலாரோக்கியம் மேம்படும். எவரையும் எடுத்தெரிந்து பேசவேண்டாம். விளையாட்டுகளிலும் ஓரளவுக்கே வெற்றி கிடைக்கும். மாணவமணிகள் மதிப்பெண்களைப் பெறுவதற்கு நன்றாக உழைக்க வேண்டிவரும். இருப்பினும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவினால் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபடுவீர்கள். மனதில் தெளிவுடன் இருப்பீர்கள். வெளிவிளையாட்டுகளிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்களிடம் கவனத்துடன் பழகவும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது. 


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

Post a Comment

 
Top