இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் மூலம் எதையும் செய்ய முடியும் என்றாகி விட்டது.

ஆன்லைன் சாட்டிங் முதல் வீடியோ சாட் வரை என பல்வேறு தொலை தொடர்பு முறையை எளிமையாக்கியிருக்கின்றது ஸ்மார்ட்போன்கள்.

இந்நிலையில் வெப் கேமராக்களின் விலை சற்று அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதை கருத்தில் கொண்டு வெப் கேமராக்களுக்கு மாற்றாக ஸ்மார்ட்போன் கேமராக்களை பயன்படுத்த முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...


Download

சரி.. வாருங்கள்...  ஸ்மார்ட்போனை எப்படி வெப் கேமராவாக மாற்றுவது என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ஸ்மார்ட்கேம் பேக்கேஜ் அப்பிளிகேஷனை உங்களது ஆன்டிராய்டு, ஐபோன்களில் சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் எக்ஸ்ட்ராக்ட் செய்ய வேண்டும்.

ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ்களுக்கு .exe என்ற ஃபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்டிராய்டு, ஐஓஎஸ் கருவிகளுக்கு இருக்கும்.

இரு கருவிகளிலும் இன்ஸ்டால் செய்த பின் ப்ளூடூத் அல்லது யுஎஸ்பி மூலம் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

ஐஓஎஸ், ப்ளாக்பெரி, சிம்பயான் கருவிகளில் மொபியோலா வெப் கேமரா செயலியை பயன்படுத்த முடியும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.  பதிவிறக்கம் செய்தவுடன் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

ஐபி வெப் கேம் உங்களது ஆன்டிராய்டு கருவியை வயர்லெஸ் பிசி வெப் கேமராவாக மாற்றும். இதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அடுத்து அப்ளிகேஷனினை இன்ஸ்டால் செய்து கணினி மற்றும் மொபைல் கருவியை ஒரே வைபை மூலம் இணைக்க வேண்டும்.

Post a Comment

 
Top