மேஷம்


மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.


மிதுனம்


மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். சிலர் உங்களிடம் நய மாகப் பேசினாலும் சொந்த விஷயங் களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.


கடகம்


கடகம்: எதிர்காலம் பற்றிய பயமும், வீண் டென்ஷனும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்துப் போகும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


சிம்மம்


சிம்மம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். காணா மல் போன முக்கிய ஆவணங் கள் கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப் படுவீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


கன்னி


கன்னி: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உங்களி டம் பழகும் நண்பர்கள், உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது திட்டங்கள் தீட்டுவீர்கள். முயற்சிகள் பலித மாகும் நாள்.


துலாம்


துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நேர்மறை சிந்தனை பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். வேலைச்சுமை மிகுந்த நாள்.


தனுசு


தனுசு: உற்சாகமாக எதை யும் முன்னின்று செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புதியவரின் நட்பால் ஆதாய மடைவீர்கள். வியாபாரத்தில் எதிர் பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


மகரம்


மகரம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.


கும்பம்


கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத் தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நினைத்தது நிறைவேறும் நாள்.


மீனம்


மீனம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிவட்டாரத் தொடர் புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

Post a Comment

 
Top