Bank நிறைய நிகழ்ச்சிகளில் எங்கள் குடும்பத்துப் பிள்ளை என்று சிவகார்த்திகேயனை முன்னிலைப்படுத்துவது விஜய் டிவி-யின் வாடிக்கை. கடந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் அழுததை மறுபடியும் மறுபடியும் போட்டு டிஆர்பி-யை எகிறவைத்தனர். ஆனால், இம்முறை சிவகார்த்திகேயன் பேசியதை அவர்களால் ஒளிபரப்ப முடியாது.

ஏனென்றால், இந்நிகிழ்ச்சி அதிகாலை 2 மணி வரை போகும். குடிக்க தண்ணிக் கூட தரமாட்டார்கள். அடுத்த முறை வரும்போது எல்லாம் புளி சோறு, தக்காளி சோறு கட்டிக் கொண்டு வந்துவிடுங்கள் என்று மேடையில் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

எப்போதுமே விஜய் அவார்ட்ஸ் என்றால், சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வந்து இறுதிவரை இருந்து சிறப்பிப்பார். ஆனால், துல்கர் சல்மானுக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது கொடுத்து முடித்தவுடன், சிவகார்த்திகேயன் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

நிகழ்ச்சி முடியும்வரை அவரை காணவில்லை. மேலும், ரஜினி முருகன் படத்தின் பர்ஸ்ட் லுக், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில்தான் வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார்கள். ஆனால் வெளியிடவில்லை. மாறாக ட்விட்டர் தளத்தில் 6 மணிக்கே வெளியிட்டு விட்டார்கள்.

இளையராஜாவை அவமானப்படுத்திய விஜய் டிவி

எப்போதுமே பெரும்பாலான விருது வழங்கும் நிகழ்ச்சியில் இளையராஜா கலந்து கொள்வதில்லை. ஆனால், செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்குகிறோம் என்று பல தரப்பட்ட முயற்சிக்கு பிறகு இளையராஜா அழைத்து வந்தார்கள். வந்தால் ஒரு மணி நேரம்தான் இருப்பேன். விருது வாங்கிவிட்டு கிளம்பிவிடுவேன் என்று கூறிவிட்டுதான் கலந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், அவர் வந்த சமயத்தில் அவ்விருது வழங்குவதற்கு சிவாஜி குடும்பத்தினர் மற்றும் பெரிய நடிகர்கள் யாரும் இல்லை. இதனால் சிறிது நேரம் அமர்ந்திருந்த இளையராஜா, விருது வாங்காமலே கிளம்பிவிட்டார். இறுதிவரை சிவாஜி குடும்பத்தினர் இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. யாருக்கு இந்த வருடம் செவாலியே சிவாஜி கணேசன் விருது என்பதையும் தேர்வுக்குழு அறிவிக்கக்கூடவில்லை.

டி.டியின் பேச்சால் எரிச்சலடைந்த விருந்தினர்கள்:

எப்போதுமே டிடி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியில், அவரே பேசிக் கொண்டிருப்பார். அவருடன் உரையாடுபவர்கள் பேசுவதற்கு கொஞ்சமே நேரம் ஒதுக்குவார். நேற்றைய விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை கோபிநாத் மற்றும் டிடி தொகுத்து வழங்கினார்கள். அதிலும், ஒரு கட்டத்தில் டிடி என்ன பேசுகிறார் என்பது பலருக்கு புரியவே இல்லை. கே.எஸ்.ரவிகுமார் அதை மேடையிலேயே போட்டு உடைத்தார். ஸ்பெஷல் ஜூரி இன்னொவேஷன் விருதினை, கோச்சடையான் படத்துக்காக செளந்தர்யா ரஜினிகாந்த் சார்பில் பெற்றுக் கொண்டார் கே.எஸ்.ரவிகுமார்.

டிடி மைக்கில் எப்படி இருக்கிறீர்கள் என்றவுடன், நல்லா இருக்கேன் என்று பயங்கரமாக கத்தினார். உடனே, முன்னாடி மைக் இருந்தாலே பேசுவது நல்ல சத்தமாக கேட்கும். முன்னாடி மைக் இருந்தாலும் கத்துவது டிடி மட்டும்தான் என்றார். பல இடங்களில் அவர் என்ன பேசினார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

ரசிகர்கள் எதிர்பார்த்த விருதை வழங்காதது ஏன்?


ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த செவாலியே சிவாஜி கணேசன் விருது மற்றும் சிறந்த பொழுதுபோக்கு நடிகர் விருதும் வழங்கப்படவில்லை. இதற்க்கு காரணம் இளையராஜா பாதியில் வெளியேறியதும், சிவ கார்த்திகேயன் எஸ்கேப் ஆனதுனாலும் இருக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொள்ளாத விஜய் அவார்ட்ஸ்:

இம்முறை விஜய், கார்த்தி, சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை. நடிகர்களில் கமல், தனுஷ் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள். ஆர்யா, ஜெயம் ரவி இருவருமே கலந்து கொண்டாலும் பாதிலேயே வெளியேறிவிட்டார்கள். முன்னணி நடிகைகளில் ஹன்சிகா, லட்சுமி மேனன் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.

சுவாரசியமே இல்லாத விழா :

கடந்த ஆண்டு ஷாருக்கான் - விஜய் இணைந்து நடனம், சிவகார்த்திகேயன் அழுதது, விஜய் சேதுபதி - நயன்தாரா காமெடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இருந்தன. இந்தாண்டு கமல் - ஸ்ருதிஹாசன், குஷ்பு - ஹன்சிகா இணைந்து நடனமாடிய சிறு நடனம், சிவகார்த்திகேயன் - துல்கர் சல்மான் விருது கொடுத்தது போன்ற சின்ன விஷயங்களைத் தவிர வேறு எந்த ஒரு சுவாரசியமே இல்லாத விழாவாக அமைந்தது.

அதிலும் பிரபுதேவா, லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், பூஜா குமார் ஆகியோர் நடனமாடினார்கள். சில நடிகர்கள் மேடையிலேயே, என்ன இன்னும் ஃபுட்டேஜ் போதவில்லையே என்று கலாய்த்ததும் அரங்கியேறியது. குறிப்பாக, பல நடிகர்கள் பாதியிலேயே வெளியேறியதும் நடைபெற்றது.

ஆச்சரிய ஒற்றுமை :

தொலைக்காட்சி உரிமை கொடுத்த படத்துக்கு பெரும்பாலான விருதுகள் கிடைத்தது ஒரு ஆச்சரியமான ஒற்றுமை. குக்கூ ஜிகர்தண்டா காவியத்தலைவன் உள்ளிட்ட படங்கள் விஜய் டி.வி இடம் உரிமை இருக்கிறது.

விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் கலைதுறையினரை அவமானப்படுத்துவதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமற்றுவதையும் விஜய் டிவிவேலையாக கொண்டுள்ளது என்று அரங்கை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் முனு முனுக்கின்றனர்.

Post a Comment

 
Top