திருமணத்துக்கு தயாராகிவிட்ட இலியானா, திருமதி நடிகைகள் வரிசையில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் காதலனை சந்திக்க ஆஸ்திரேலியா பறந்தார் இலியானா, அவருடன் ஜோடிபோட்டு பல இடங்களுக்கு ஜாலியாக சுற்றித்திரிந்தவர்கள், மெல்போர்னில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பொழுதை கழித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்படும்போது பாய்பிரண்டுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டு காதலன் மிகவும் அழகாக இருப்பதாக வர்ணித்திருக்கிறார். விரைவிலேயே பாய்பிரண்டை மணக்க திட்டமிட்டிருக்கிறார் இலியானா. திருமண விஷயம் பட வரவை பாதிக்காத வகையில் ஒருபக்கம் ஸ்கிரிப்ட்டும் கேட்டு வருகிறாராம்.

Post a Comment

 
Top