கன்னி

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் உங்கள் செய்தொழிலில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்புகள் தேடிவரும். பொது நலப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். இரக்க சுபாவம் அதிகரிக்கும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைத்திருந்தோர் அதை இந்த காலகட்டத்தில் செய்வார்கள். குழந்தைகளும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர் வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள். சில நேரங்களில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதனால் எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். எதன் காரணமாகவும் உங்கள் செல்வாக்கு குறையாது. வீட்டிலும் அக்கம்பக்கத்திலும் இருந்துவந்த அனைத்துப் பிரச்னைகளும் நல்ல
படியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரமும் மேலாண்மையும் நிலைநாட்டப்படும். நண்பர்களும் உடன்பிறந்தோரும் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள்.
நெடுநாளாக தள்ளிப் போட்டிருந்த குல தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். ஆலய திருப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். பொதுக் காரியங்களில் நீதியை நிலைநாட்ட பாடுபடுவீர்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் தேவைக்கேற்ப செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகபடுத்திக் கொள்வீர்கள். இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும். பழைய விரோதிகளும் உங்களுடன் நட்பு பாராட்டி உங்களின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். எவரிடமும் அனாவசிய வீண் பேச்சுக்கள் வேண்டாம். மேலும் உங்கள் பெயரில் எவருக்கும் கடன் வாங்கித் தர வேண்டாம். உங்களின் நீண்ட கால எண்ணம் ஒன்று இந்த ஆண்டு நிறைவேறி உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலை பளுவும் அதிகரித்தாலும் உங்களின் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்கள் ஆற்றல் கூடப்பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் பணவரவு உண்டாகும். மேலும் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றங்களும் உண்டாகும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். அதோடு கடும்போட்டிகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் நலமாக முடியும். கூட்டாளிகளும் உங்களுடன் சுமுகமாக நடந்து கொள்வார்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காது. எல்லா காரியங்களும் தடையுடன் வெற்றி பெறும். காய்கனி, பால் வியாபாரத்திலும் லாபங்கள் காணலாம். குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். புதிய நிலங்கள் வாங்கும்போது வில்லங்கங்களைப் பார்த்து வாங்கவும்.
அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகி லாபத்துடன் வெற்றி பெறுவீர்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கிய பயணங்களைச் சிறப்பாக முடிப்பீர்கள். அதனால் கட்சியின் பெயர் உயரும். கலைத்துறையினரின் பெயரும் புகழும் சிறக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடிவரும். ரசிகர்களின் ஆதரவைப் பெற்று புதிய ரசிகர் மன்றங்களைத் திறப்பீர்கள். கலை பயணங்களையும் செய்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரின் உறவு சுமாராகவே இருந்தாலும் குடும்பத்தினரிடம் நல்ல உறவு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உணவு விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறுங்கள். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடல்நலம் பலமடைய தினமும் உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள்.
பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

Post a Comment

 
Top