மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்களின் செயல்களில் காணப்படும் தடைகளை அனுபவமிக்கவர்களின் துணையுடன் தகர்த்தெறிவீர்கள். பெற்றோரிடம் சுமுகமாக இருப்பீர்கள். உங்களின் அனைத்து செயல்களிலும் ஒரு பொதுநல நோக்கு இருக்கும். தற்காலத்திற்குத் தேவையான யுக்திகளை மாற்றிக்கொண்டு செயல்பட்டு புகழப்படுவீர்கள். இக்கட்டான நேரங்களில் ஒரு நிலையோடு நடந்து கொள்வீர்கள். உங்களின் கற்பனைத்திறன் புதிய படைப்புகளை உருவாக்கும். பழைய கடன்களையும் திருப்பி அடைப்பீர்கள். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை களைய முயற்சி செய்வீர்கள். வழக்குகளை நீதி மன்றங்களுக்கு வெளியில் சமாதானமாக முடித்துக் கொள்வீர்கள். உங்களின் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். வருமானமும் படிப்படியாக வளரும். மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாகவும் பக்கபலமாகவும் இருப்பார்கள். மேலும் அலுவலக வேலைகளில் தொந்தரவுகள் இராது. மேலும் உங்களைத் தவறான செயல்களில் ஈடுபடத் தூண்டும் சக ஊழியர்களிடமிருந்து விலகி விடுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களை இடையூறின்றி முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் மனத்திருப்தியுடன் வியாபாரத்தை நடத்துவார்கள். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் குறையும். வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும் குறிப்பிட்ட தேவைகளையும் எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்து விடுவீர்கள். வியாபாரத்தை தனித் தன்மையுடன் நேர்மையாக நடத்தி பெயரெடுப்பீர்கள். சிறிய முதலீட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தை அள்ளுவீர்கள். கால்நடைகளாலும் வருமானம் வரும். எதிர்பார்த்த கடன்கள் மானியத்துடன் கிடைக்கும். மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய கடன்களும் கைவந்துசேரும்.
அரசியல்வாதிகளுக்கு நேரடியாகத் தொல்லை கொடுத்தவர்கள் சற்று அடங்கி நடப்பார்கள். அதோடு அவர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கவும். மற்றபடி கட்சியில் உங்களின் திறமைக்கேற்ப புதிய பொறுப்புகள் கிடைக்கும். காலத்திற்கேற்றவாறு தற்கால நிலைமைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள முற்படுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத இடத்திலிருந்து பணம்வரும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். உங்கள் திறமைகளில் புதுப்பொலிவைக் காண்பீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். உழைப்பிற்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுவீர்கள். ரசிகர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். சக கலைஞர்களின் நட்பு புதிய அனுபவங்களைக் கொண்டு சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைக் கேட்காமலேயே செய்வீர்கள். புதிய வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். மாணவமணிகள் அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவர். மனக்குழப்பங்களைத் தவிர்க்க தியானம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். விளையாட்டுகளிலும் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள். மேலும் உடல்நலத்தில் சிறிது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிவரும். மற்றபடி பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது.
புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க
Post a Comment