சிம்மம்

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். மனம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். புதிய சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு உண்மையான ஒத்துழைப்பை நல்குவார்கள். செய்தொழில் படிப்படியாக மேன்மையடையும். இதுவரை இல்லாத தன்னம்பிக்கை உங்கள் மனதில் குடிகொள்ளும். மிடுக்காக நடப்பீர்கள். சமுதாயத்தில் உங்கள் கௌரவம் அந்தஸ்து உயரும் சம்பவங்கள் நடக்கத் தொடங்கும். குடும்பத்திலும் உங்கள் மதிப்பு உயரும். உங்களின் பேச்சை அனைவரும் கேட்பார்கள். உங்கள் மீது அதிருப்தி அடைந்திருந்த பெற்றோர்கள் உங்களிடம் அன்பு செலுத்துவர். செய்தொழிலில் பிரதான விநியோகஸ்தர் என்கிற நிலை கிடைக்கும். புதிய நண்பர்கள் உங்களுடன் கூட்டணி வைப்பார்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் முத்தான விஷயங்கள் நடக்கும். சிலர் புதிய நிலங்களை வாங்குவார்கள்.
நீங்கள் விரும்பியபடி சரியான முடிவுகளை எடுப்பீர்கள். நெடுநாளாக தொடர்ந்து வந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வந்து மன உளைச்சல்களிலிருந்து விடுபடுவீர்கள். செய்தொழிலில் போட்டி பொறாமைகள் இருந்தாலும் அவற்றைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். ஆசைப்பட்டவற்றை எப்படியும் அடைந்துவிடுவீர்கள். தொழில் நிமித்தமாகச் செய்யும் பயணங்களால் சிறப்பான அனுகூலங்களைக் காண்பீர்கள்.
அரசுவழியில் சந்தித்த சில சிரமங்கள் மறையும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெளிந்த அறிவுடன் காரியமாற்றுவீர்கள். உங்கள் செயல்களை நேர்மையாகச் செய்வீர்கள். நண்பர்களுக்குத் தேவையான ஆலோசனைகளைக் கூறுவீர்கள். உங்களின் கடின உழைப்பு இந்த ஆண்டு வீண் போகாது என்கிற ரீதியில் இந்த ஆண்டு செல்லும் என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவார்கள். இருப்பினும் சக ஊழியர்களிடம் பகைமை பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். மேலும் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி செயலாற்றினால் தோல்வியில் இருந்து தப்பிக்கலாம். செயல்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நிலவி வந்த போட்டி பொறாமைகள் குறைந்து சுமுக நிலைமை உண்டாகும். கவனத்துடன் இருந்து வியாபாரத்தை விரிவுபடுத்தவும். கொடுக்கல்வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். சில நேரம் நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் மனக்கசப்புகள் உண்டாகலாம். எனவே புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது அவர்களை கலந்தாலோசித்து செய்யவும்.
விவசாயிகளுக்கு வருமானம் குறைந்தாலும் செலவு கூடினாலும் தைரியத்திற்கு குறைவு வராது. விளைபொருள்கள் விற்பனை நல்ல முறையில் நடக்கும். கால்நடைகளையும் நன்கு பராமரிப்பீர்கள். குறித்த நேரத்தில் பூச்சி மருந்தை தெளித்து பயிர்களைக் காப்பாற்றுவீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் சிறிய அலைச்சல்களைக் காண்பார்கள். எதிர்கட்சியினரும் உங்களை கண்காணிப்பார்கள். கட்சி மேலிடமும் தொண்டர்களும் அனுசரணையாக இருப்பார்கள். புதியவர்களும் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள்.
கலைத்துறையினர் அதிக முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கலைஞர்கள் அடுத்தவர்களின் அபிமானத்தைப் பெறுவார்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் அதிக கவனத்துடன் உழைத்து விருதுகளையும் பாராட்டுகளையும் பெற நேரிடும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்கள் பேச்சைக் குறை சொல்லுவார்கள். இதனால் அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். குழந்தைகளால் பெருமையடைவீர்கள்.
மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள். பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் அனுசரித்து நடந்து கொண்டு நற்பெயரெடுப்பார்கள். மனதை ஒரு நிலைப்படுத்தினால் மேலும் புகழடையலாம்.
பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு நலமடையுங்கள். 


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

Post a Comment

 
Top