கோலிவுட்டின் அதிர்ஷ்ட லெட்சுமி... லட்சுமி மேனன். கும்கியில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த கொம்பன் படங்கள் வரை அவர் நடித்த எல்லா படங்களும் ஹிட்டாகி இருக்கின்றன. தற்போது ப்ளஸ்-2 தேர்வு எழுதிவிட்டு, ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் லட்சுமி மேனன், சில காலம் வெளிநாடுகளுக்கு சென்று ஓய்வு எடுக்க முடிவெடுத்து இருக்கிறார். இந்நிலையில் அவர் திருமணம் செய்ய இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதனை மறுத்திருக்கிறார் லட்சுமி மேனன்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இப்போது நான் இல்லை. தனியாக இருப்பதே மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய ஆண்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். காதல் கல்யாணத்திற்கு நான் தகுதி இல்லாதவளாக கருதுகிறேன். தொடர்ந்து குடும்ப பாங்கான ரோலில் நடிக்க விரும்பவில்லை. இப்போதைக்கு நான் ஓய்வு எடுக்க எண்ணியுள்ளேன். ஆகையால் பாரீஸ்க்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

Post a Comment

 
Top