மேஷம்


மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் செலவுகளை குறைக்க முடியாமல் நீங்கள் திணறுவீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


மிதுனம்


மிதுனம்: குடும்பத்தை் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்


கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்யோகத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள்.


சிம்மம்


சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். கௌரவம் கூடும் நாள்.


கன்னி


கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பணப்புழக்கம் உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.


துலாம்


துலாம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் 4,5 முக்கிய வேலைகளை பார்க்க வேண்டி வரும். யாரையும் நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள். சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவர். வியாபாரத்தில் லாபம் குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: தன்னம்பிக்கை யுடன் எதையும் செய்ய துவங்குவீர்கள். பிள்ளை களால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மை யுடன் நடந்துக் கொள்ளும் நாள்.


தனுசு


தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. பழைய சொந்தம் தேடி வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


மகரம்


மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.


கும்பம்


கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.உங்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.


மீனம்


மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

Post a Comment

 
Top