பிரித்தானியா முன்னாள் இளவரசி டயானா மற்றும் இளவரசர் சார்லஸிற்கு ரகசியமாக மகள் ஒருவர் இருக்கிறார் என வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிரபல வாரப்பத்திரிகையான Globe சமீபத்தில் சிறப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானியாவின் இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி டயனாவிற்கு வில்லியம் தவிர வேறொரு ரகசிய மகள் இருக்கிறார் என பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

சார்லஸ் மற்றும் டயானா திருமணம் நடந்து 11 மாதத்திற்கு பிறகு இளவரசர் வில்லியம் பிறந்திருக்கும்போது, அதற்கு முன்னர் அவர்களுக்கு ரகசிய மகள் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை என கேள்விகள் எழுப்பபட்டது.

ஆனால் இந்த கேள்விக்கும் விளக்கம் அளித்து அந்த பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சார்லஸ் மற்றும் டயானாவின் திருமணத்திற்கு முன்னர், டயானாவால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியுமா என சார்லஸின் தாயான ராணி எலிசபெத்திற்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து, டயானாவை சில மருத்துவ பரிசோதனை செய்யுமாறு ராணி உத்தரவிட்டுள்ளார். டயானாவின் கரு முட்டை மற்றும் சார்லஸின் விந்தணுவை எடுத்து இணைத்து அவர்களுக்கு குழந்தை பிறக்குமா என மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

இந்த பரிசோதனையில் டயானா குழந்தை பெற தகுதியானவர் என மருத்துவர்கள் ராணியிடம் கூறியதை தொடர்ந்து, கருமுட்டையையும் விந்தணுவையும் அழித்து விடுமாறு ராணி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், மருத்துவர்களில் ஒருவர் அவற்றை அழிக்காமல் பாதுகாப்பாக எடுத்துச் சென்று தனது மனைவிக்கு தெரியாமல் அவருடைய கருப்பையில் செலுத்தி விடுகிறார்.

இதன் மூலம் கருவுற்ற மருத்துவரின் மனைவி, வளர்வது அரசு குடும்பத்தின் வாரிசு என தெரியாமலே கடந்த 1981ல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார்.

பிரித்தானியாவில் ஒரு சிறுநகரில் வசித்த வந்த பெற்றோர்கள் அந்த குழந்தைக்கு சாரா(Sarah) என பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர்.

சாராவிற்கு 20 வயது அடைந்தபோது, அவர்களது பெற்றோர்கள் இருவரும் கார் விபத்து ஒன்றில் இறந்து விடுகின்றனர்.

பின்னர், வீட்டில் இருந்த டயரி ஒன்றில் அவரது தாயாருக்கு கருமுட்டை தானமாக ஒருவர் கொடுத்ததால் தான் சாரா பிறந்ததாக குறிப்பிடப்பட்டிருந்து.

இதனை தொடர்ந்து, தனது பிறப்பின் ரகசியத்தை தெரிந்துக்கொள்ள சாரா பல வழிகளில் முயற்சி செய்து வந்துள்ளார்.

அப்போது ஒரு தொலைப்பேசி அழைப்பில் ‘உன்னுடைய பிறப்பின் ரகசியத்தை தெரிந்துக்கொள்ள முயற்சித்தால் மரணத்தை சந்திப்பாய்’ என மிரட்டல் அவருக்கு வந்துள்ளது.

இதனால் பயந்த அவர் உடனே அமெரிக்காவிற்கு தப்பி சென்று விடுகிறார். மேலும், பாரீஸ் ரகரில் டயானா இறந்தது விபத்து அல்ல என்றும் அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை எனவும் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால், தனது பிறப்பை அறிய முயற்சிக்காமல் சாரா தவிர்த்து வருவதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் கூட சாராவிடம் சுமார் 44 நிமிடங்கள் ரகசியமாக சந்தித்து உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் அரசு குடும்பத்தை பற்றி பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ள அந்த வார பத்திரிகை அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

கேட் மிடில்டன் இரண்டாவதாக குழந்தை பெறும் நேரத்தில் வெளியாகியுள்ள இந்த தகவலால் பிரித்தானியா மக்களிடையே அதிர்ச்சியும் வியப்பும் ஏற்பட்டுள்ளது.



Post a Comment

 
Top