உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா..??
சீக்கிரம்..சீக்கிரம்..சிக்கல் வேண்டாமப்பு..!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்,ஆனால் இப்போதெல்லாம் கண்டவுடன் காதல் வந்துசேர நினைத்து முடிப்பதற்கிடையில் திருமணம் என்பது நடந்து முடிகின்றது.

ஆனால் இன்னும் எங்கள் மத்தியில் சாதி,அந்தஸ்து,தொழில்,அழகு என்று பார்த்துக்கொண்டு தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரழிக்கும் பெற்றோர்கள் இல்லாமல் இல்லை.

இதன் காரணத்தால் காதலிக்கும் பிள்ளைகள் கூட பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதை காரணம் காட்டி காதலுக்கு டாட்டா காட்டி விடுகிறார்கள்.

ஆனால் பண்டைய காலங்களில் சீதனக் கொடுமைகள் காரணமாக இந்தியாவில் பெண் குழந்தைகளை விரும்பாத தாய்மார்கள் அவர்களை எழுபது,எண்பதுகளில் கருவிலேயே இல்லாது செய்த செயல்கள் காரணமாக நாட்டில் பெண்களுக்கான கிராக்கி இப்போதைய உலகில் அதிகரித்திருக்கிறது என்ற கதைகளும் இல்லாமல் இல்லை .

இது இலங்கையில் எப்படி இருக்கிறது என்று ஆராய்வதை விட்டு விட்டு சீக்கிரம் டும் டும் டும் க்கு ஏற்பாடு செய்யுங்கள், இல்லையேல் இந்தியாவில் இருக்கும் இளம் வாலிபர்கள் திண்டாடும் நிலைமையே உங்களுக்கும் வந்துவிடும்.

அட அப்படியென்ன இந்தியாவில் நடக்கிறது என்றா கேட்கிறீர்கள்.

ஆமாம் ,இந்தியாவில் இருக்கும் திருமணமாகாத 5 ஆண்களுக்கு 1 பெண் என்ற ரீதியில்தானாம் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 6.50 கோடி திருமணமாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனராம்.

இப்படியான திண்டாட்டம் இந்தியாவில் இருக்கிறது என்பதை காரணம் காட்டியாவது நீங்களும் உங்கள் அடுத்த கட்டத்துக்கு தயாராகிவிடுங்கள்.

அப்பாடா நாங்கெல்லாம் தப்பிச்சிட்டோம் என்று திருமணமான உங்கள் சகநண்பர்களின் கிண்டல்கள் இன்னும் எதற்கு..??

சீக்கிரம்..சீக்கிரம்..சிக்கல்கள் வேண்டாமப்பு...!

*தி.தரணீதரன்.

Post a Comment

Top