நடிகர், நடிகைகளின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகம் என்பது சகஜமான விஷயம். கிரிக்கெட் வீரரின் வாரிசு சினிமாவுக்கு வருவது அரிது. கிரிக்கெட் கடவுள் என்று ரசிகர்களால் பாராட்டுபெற்ற சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளார். 18 வயதே நிரம்பிய சாராவுக்கு ஜோடிபோடப்போகிறார் பாலிவுட் ஹீரோ ஷாஹித் கபூர்.சாராவை தெரியாதவர்கள் பாலிவுட்டில் இருக்க முடியாது. எல்லோருக்குமே அறிமுகமானவர். திரைப்பட நிகழ்ச்சிகள், கிரிக்கெட் மேட்ச் நடக்கும்போது அதில் தனது அம்மா அஞ்சலியுடன் கலந்துகொண்டு இயக்குனர்கள் மற்றும் இண்டஸ்ரிகாரர்களின் கவனத்தை கவர்ந்திருப்பவர். ‘நடிகையாவதற்கான அத்தனை தகுதியும் சாராவுக்கு இருக்கிறது. அவர் ரசிகர்களின் மனதை நிச்சயம் கொள்ளையடிப்பார். பள்ளி நாடகங்களில் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர்’ என அவரது தோழிகள் இப்போதே அவரைப்பற்றி துதிபாட தொடங்கி இருக்கிறார்கள்.

Post a Comment

 
Top