விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அனைவரிடமும் கனிவாகப் பேசி உறவை வலுப்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். வம்பு, வழக்குகளிலிருந்து தள்ளியிருக்கவும். பழைய வழக்குகளிலும் தீர்ப்பு வரத் தாமதமாகும். இந்த ஆண்டு நீங்கள் சிறு தவறுகள் செய்தாலும் அவற்றால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உடலாரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றை செய்து உடல்நலம், மனவளம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வீர்கள். வெளியூர், வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். உழைப்பின் மூலம் சாதனைகள் செய்யும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்துவந்த கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். மூத்த அதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளைக் கரிசனத்துடன் பரிசீலிப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகப் பணிகளில் உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளை குறைந்த அளவுக்குச் செய்து லாபமடைவீர்கள். பொறுமையுடனும் பொறுப்புடனுமிருந்து வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் மதிப்பு உயரும். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவார்கள். பணவரவு சீராக இருந்தாலும் புதிய குத்தகைகளைத் தவிர்த்திடுங்கள். விவசாயக் கூலிகளுக்கு உங்களால் ஆன உதவிகளைச் செய்யுங்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழியில் இருந்த தடைகளும் விலகும்.
அரசியல்வாதிகள் பொதுசேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகள் பெறுவார்கள். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எதிர்கட்சியினரும் உங்களிடமிருந்து சற்று விலகியிருப்பார்கள். மக்களின் ஆதரவு உங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பார்கள். ரசிகர்களின் ஆதரவுடன் மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிய கலைஞர்களின் நட்பு கிடைக்கும். அசையாச்சொத்துக்களையும் வாங்குவீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்ப நலம் சீராகவும் ஒற்றுமையாகவும் இருக்கக் காண்பார்கள். பெற்றோர்களின் ஆதரவும் அவர்களால் தன லாபங்களும் உண்டாகும். இல்லத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தின் வருவாய் அதிகரிக்கும் ஆண்டாக இது அமைகிறது. மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். நன்றாக உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். எதையும் சிந்தித்துப் பார்த்து செயலாக்குவார்கள். மற்றபடி தியானம், பிராணாயாமம் போன்றவற்றை செய்து நலம் பெறுங்கள்.
பரிகாரம்: மஹாலட்சுமியை தரிசித்து நலம் பெறுங்கள்.
புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க
Post a Comment