பிரபல பாலிவுட், கோலிவுட் கேமரமேனாக இருந்த நட்டி என்ற நடராஜன், சதுரங்க வேட்டை' என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் என்பது ஏற்கனவே அறிந்ததே. அவர் அடுத்த படமான 'கதம் கதம்' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ்ல் நல்ல கலெக்ஷனை கொடுத்தது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் 'புலி' படப்பிடிப்பிற்காக நட்டி தலக்கோணத்தில் விறுவிறுப்பாக பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவரை ஒரு படத்தில் புக் செய்ய ஈராஸ் நிறுவனம் தனது பிரதிநிதிகளை 'புலி' படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் அடுத்த படத்தில் நட்டிதான் ஹீரோ. 'பசங்க' பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த ராமு, இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மூடர் கூடம் படத்தில் நடித்த ராஜாஜி இந்த படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்கின்றார்.

இந்த படத்தில் நடிக்கவிருக்கும் இரண்டு ஹீரோயின்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment

 
Top