ஐதராபாத்: நேபாளத்தை சீர்குலைத்த இன்று 7.9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பம் சுமார் 900 பேரை பழிவாங்கியது. பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பூகம்பம், நேபாள பிராந்தியத்தில் கடந்த 1934க்கு பிறகு ஏற்பட்ட கடுமையான பூகம்பம் என தேசிய புவியியல் மையம் கூறியுள்ளது. மேலும் பூகம்பத்திற்கு பின் ஏற்படும் நில அதிர்வுகள் அடுத்த 15 நாட்கள் வரை ஏற்படும் எனவும் கூறியுள்ளது.
இது தொடர்பாக மூத்த விஞ்ஞானி ஆர் கே சத்தா கூறுகையில், மேக்னிடியூட் அடிப்படையில் கணக்கிட்டதில், இன்று நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய பூகம்பம் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் ஏற்படும் நில அதிர்வுகள் 10 முதல் 15 வரை உணரலாம். இது குறைந்த அளவில் தான் இருக்கும்.

இன்று காலை, 11.41 மணியளவில் காத்மாண்டுவின் வட மேற்கு பகுதியில் 80 கி.மீ., தூரத்தை மையமாக வைத்து ஏற்பட்ட பூகம்பத்தை தேசிய புவியியல் மையம் ஆய்வு செய்தது. அப்போது மாலை 4.30 மணி வரை, 5 முதல் 6.6 ரிக்வர் அளவில் பூகம்பத்திற்கு பிந்தைய நில அதிர்வுகள 15 முறை உணரப்பட்டது என கூறினார்.

கடந்த 1934ம் ஆண்டு நேபாளம் பீகார் எல்லையில் 8.4 ரிக்டர் அளவில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டதாகவும், அதற்கு பின் தற்போது தான் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

Post a Comment

 
Top