விவசாய பயிர்க்கடன் 7சத வட்டியை ரிசர்வ் வங்கி நிரந்தரமாக்கிட வேண்டும் என மத்திய அரசுக்கு அகிலஇந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13சதவிகிதத்திற்கும் மேல் பங்களிப்பை தருவது விவசாயம் என்று நாம்பெருமையோடு கொள்ளும் மகிழ்ச்சி,விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று வரும்போது அந்த மகிழ்ச்சியை தாற்காலிகமான மகிழ்ச்சியாகத்தான் கருதமுடியும்.

ரிசர்வ் வங்கி 2015-16சிறப்பு விவசாய கடன் சலுகை அளித்ததில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் 7சத வட்டியில் வழங்க வேண்டும் என்றும்,குறித்த காலக்கெடுவிóல் கட்டிமுடித்தால் அதில் 3சத சலுகை வழங்கி 4சத வட்டி மட்டும் வசூலிக்கலாம் என்று வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.

இச்சலுகையை மார்ச்2015,31ம்தேதியோடு முடித்துகொள்ளுமாறு அறிவித்துள்ளது. பின்னர் இதே சலுகையை ஜூன் இறுதிவரை நீட்டித்துள்ளது.இப்படி அவ்வப்போது நீட்டிக்காமல் விவசாய பயிர்க்கடனுக்கு 7சத வட்டியை உறுதிசெய்து அதை ஒழுங்காக கட்டும் விவசாயிகளுக்கு 3சதசலுகையை வழங்கி 4சத வட்டியை உறுதி செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு இந்தசலுகை நிரந்தரமாக கிடைக்க செய்யவேண்டும்.மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ரிசர்வ் வங்கி தற்போது அதிகரிக்க இருக்கும் வட்டிவிகித உயர்வை திரும்ப பெற செய்வதோடு மேலும் வட்டி சதத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top