இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல்., போட்டிகளில் விளையாடி வந்தவர் தற்போது அதிலிருந்தும் விலகி மும்பை அணியின் ஆலோசகராக மட்டும் இருந்து வருகிறார். சச்சின்-அஞ்சலி தம்பதிக்கு இரண்டு வாரிசுகள். மூத்த பெண் சாரா, மகன் அர்ஜூன். சாராவுக்கு தற்போது 18 வயதாகிறது. மற்ற பிரபலங்களை போல் அல்லாமல் சச்சின் தனது வாரிசுகளை பொது நிகழ்ச்சிகளுக்கு எப்பவும் அழைத்து செல்வார்.

இந்நிலையில், சாராவை பார்த்து விட்டு சில இந்தி தயாரிப்பாளர்கள் அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக சச்சினிடமும் பேசி வருகின்றனர். சாராவுக்கும் நடிகையாகும் ஆசை இருப்பதாகவும், அப்பாவின் ஒப்புதல் கிடைத்தால் நடிக்கலாம் என்று எண்ணியிருக்கிறாராம். விரைவில் சாரா பற்றிய சினிமா செய்தியை எதிர்பார்க்கலாம்.

25 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top