வலியவன் படத்தை அடுத்து ஜெய் நடிக்கவுள்ள புதிய படத்தை இயக்குனர் திரு' இயக்கவுள்ள செய்தி குறித்து ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நேற்று சென்னையில் உள்ள ஏசிஎஸ் அலுவலகத்தில் நடந்தது. இந்த பூஜையில் ஜெய், தயாநிதி அழகிரி, சமுத்திரக்கனி, சதீஷ், தமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் முதலில் ஜெய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இந்த படத்தில் இருந்து விலகியதால் தற்போது ஜெய்க்கு ஜோடியாக நடிக்க டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமன் இசையமைக்கும் இந்த படத்தை த்ரிஷாவின் வருங்கால கணவர் வருண்மணியன் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற ஏசிஎஸ் அலுவலகத்தில்தான் 'மங்காத்தா' படத்தின் பூஜை நடந்ததாகவும், அந்த செண்டிமெண்ட் காரணமாகவே அதே இடத்தில் இந்த படத்தின் பூஜையும் அதே அலுவலத்தில் நடைபெற்றதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா பெற்ற வெற்றியை ஜெய் படமும் பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் சென்னை மற்றும் கும்பகோணத்தில் நடைபெறவுள்ளது.



23 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top