rishabamரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஆண்டு உங்களின் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல் வைராக்கியத்துடன் பணியாற்றுவீர்கள். அரசு அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவையும் சலுகைகளையும் பெறுவீர்கள். நெடுநாளாக தள்ளிவைத்திருந்த செயலை இந்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வருவீர்கள். கொடுத்த வாக்கை உடனுக்குடன் காப்பாற்றி விடுவீர்கள். யுக்தியுடன் நடந்துகொண்டு பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனத்தால் பங்குவர்த்தகம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளிலும் லாபமீட்டுவீர்கள். மேலும் பிரச்னைகளை பெரிது படுத்த வேண்டாம். எதற்காகவும் நீதிமன்றம் சென்று வழக்கு தொடரவேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். வண்டி, வாகனங்களுக்கும் சிறிது பழுது பார்க்கும் செலவு உண்டாகும். கணக்கு வழக்குகளையும் சரியாக வைத்துக் கொண்டால் எதிர்காலப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். எவருக்கும் முன் ஜாமீன் போடுவதையோ உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதையோ இந்த ஆண்டு தவிர்த்து விடவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு வேலையில் பளு குறையும். சக ஊழியர்கள் தேவையான ஒத்துழைப்பை நல்குவார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை உணர்வுப் பூர்வமாகப் பரிசீலித்து சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். உங்களுக்கு விருப்பமான இடமாற்றங்களும் கிடைக்கும். வருமானம் உயரும். வியாபாரிகள் இந்த ஆண்டு சற்று கூடுதல் எச்சரிக்கையுடன்
வியாபாரம் செய்ய வேண்டும். கூட்டாளிகளுடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அடுத்தவர்களின் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருப்பதால் செலவுகளைக் குறைக்கும் வழிமுறைகளைத் தேடுங்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். அமோகமான மகசூலைக் காண்பீர்கள். மேலும் தகுந்த நேரத்தில் தரமான விதைகளை விதைத்து வளமையை கூட்டிக்கொள்வீர்கள். விளைபொருள் விற்பனையிலும் லாபங்களைக் காண்பீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்திருந்த பலன்கள் பெறமுடியாமல் போகும்.
அரசியல்வாதிகள் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். தொண்டர்கள் நுட்பமாக இருப்பார்கள். எதிர்க்கட்சியினரின் போட்டி பொறாமைகளுக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறையினருக்கு தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக் கொண்டு தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உருவாகும். மேலும் புதிய வாய்ப்புகள் தடங்கலின்றி வந்து கொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களை மேற்கொண்டு பலனடைவீர்கள். பெண்மணிகள் இந்த ஆண்டு போதுமென்ற மன நிலையில் நிறைவைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவார்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டி வரும். அனாவசியப் பேச்சுகள் வேண்டாம். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரம் போடுவதற்கான சூழ்நிலை உருவாகும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேணடாம். உங்கள் தன்னம்பிக்கை உயரக் காண்பீர்கள்.
பரிகாரம்: அனுமனை வழிபட்டுவர நன்மைகள் கூடும்.
புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.