ஓர் கொலைக்களம் ..இரத்த வெள்ளத்தில் ஆயிரம் உடலங்கள் ..
ஆனால் பார்ப்பவர்கள் எண்ணத்தில் எவ்வித இரக்கமும் எட்டிப்பார்க்கவில்லை. அவர்கள் சிந்தையில் உதித்தது ஒரு விடயம் தான்..
இக்கொலைகளின் பின் தம் வாழ்வில் செழுமையும் மகிழ்ச்சியும் இமயத்தின் முகடுகளில் இருந்து தோன்றும் கங்கை நதி போல் பிரவகிக்கப் போகின்றது என்பதே அது ....

அவர்கள் எண்ணம் ஈடேறியதா?
அதன் பின் நடந்தது என்ன?


ஆம் அது  2009 ஆம் ஆண்டு !!!

நேபாள தேசத்திற்கு உட்பட்ட ஒரு அழகிய கிராமம். பாரியப்பூர் அதன் பெயர். இந்திய எல்லைக்கு அண்மித்ததாக உள்ள இக் கிராமத்தில் சக்தியின் அதிபதியாகிய காதிமை அம்மன் ஆலயம் உள்ளது ..அத் தெய்வத்திற்கு அன்போடு வகை தொகை இன்றி அளித்திடும் மிருகபலி தம் வாழ்வினை மேம்படுத்தும் என்பது இங்குள்ள மக்களின்  நம்பிக்கை. ஒரு தெய்வீக தேசத்தில் தெய்வத்தின் பெயரால் கொடுக்கப்படும் மிருகபலி...இற்றைக்கு 6 வருடங்களிற்கு முன் நடந்தேறிய ஒரு மாபெரும் உயிர் அழிப்பின் சாபமா இன்றைய நில அதிர்வின் உயிர் பலிகள் ..
இதற்கான விடைகள் அந்த தெய்வத்திற்கே வெளிச்சம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 'கொண்டாடப்படும்' இந்தக் குருதியில் விலங்குகள் குளிக்கும் வேள்வித் திருவிழா கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத இறுதியிலும் நடைபெற்றிருக்கிறது.
(கீழேயுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்டுவது கடந்த ஆண்டின் காதிமை வேள்விப்பலிகளின் கொலைக்களம் தான்)

நியுட்டனின் மூன்றாம் விதியோ இல்லையேல் இந்துக்களின் உயர் நம்பிக்கையான வினையின் பயனோ ..எதுவாக இருப்பினும் இரு நாட்களில் 3 லட்சம் உயிர்களை தம் வாழ்கை செழிப்புற வேண்டும் எனும் நோக்கத்திற்காக பலி கொடுக்கும் இம் மனிதர்களின் அறியாமையினை என்னவென்று சொல்வது ?



ஆறாயிரத்திற்கும் அதிகமான எருதுகள் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் சேவல்கள் கோழிகள் புறாக்கள் எலிகள் இவையே இவ் இரு நாட்களில் பலிகொடுக்கப்பட்ட உயிரினங்கள்


காதிமை படுகொலைக்களம் பதறவைக்கும் காணொளி


- கந்தசாமி சூர்யா
படங்கள் : Dailymail.co.uk
27 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top