தனுசு

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் உங்கள் குடும்பத்தில் அமைதி நிறைந்து காணப்படும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் அனுபவமிக்கவர்களின் துணை கிடைக்கும். கெடுதிகள் தானாகவே மறைந்து விடும். வேண்டியது அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கும். மனதில் சலனமில்லாமல் தெளிந்த நீரோடையைபோல் ஆனந்தமாய் காரியமாற்றுவீர்கள். அனாவசிய பயமும் பறந்தோடிவிடும். செய்தொழிலில் உயர்வுகளைக் காண்பீர்கள். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் சிறு போராட்டங்களுக்குப்பிறகு லாபம் கிடைக்கும். சுயநலமாக இருக்கும் நண்பர்களை ஒதுக்கிவிட முடியாமல் என்ன செய்வது என்று யோசிப்பீர்கள்.
அடுத்தவர்களுக்கு பயன் கருதாமல் உதவிகளைச் செய்வீர்கள். உங்களின் புத்திக் கூர்மையாலும் உலக அனுபவத்தாலும் மற்றவர்களின் எண்ணங்களை மாற்றி உங்கள் சிந்தனைகளை ஏற்றுக் கொள்ளச் செய்து விடுவீர்கள். மேலும் நண்பர்களை நம்பி பண முதலீடு எதையும் செய்யக்கூடாது. உயர்வான நிலையை எட்டினாலும் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் சென்று அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உடலாரோக்கியம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவீர்கள். தன்னம்பிக்கையுடன் அன்பு கலந்து இன்சொல் பேசுவீர்கள். ஆடம்பரம் இல்லாத சாதனைகள் செய்யும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் சற்று தாமதத்துடன் பரிசீலிப்பார்கள். இதனால் கோபமடையாமல் பொறுமை காக்கவும். முடிவு சாதகமாக அமையும். மற்றபடி உங்கள் வேலைகளைக் கருத்தாகச் செய்து முடிப்பீர்கள். திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே கிடைக்கும் ஆண்டாக இது அமைகிறது. வியாரபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல்களில் எந்தக் குறையும் ஏற்படாது. புதிய முதலீடுகளை கூட்டாளிகளை ஆலோசித்த பின்னரே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை வாங்கி விற்பனை செய்வீர்கள். அதேநேரம் பழைய கடன்களை வசூலித்தபிறகே புதிய கடன்களை கொடுக்கவும். சந்தையில் போட்டிக் கேற்றபடி விலையை நிர்ணயித்து லாபமீட்டுவீர்கள். விவசாயிகளின் திறமைகள் வீண்போகாது. விளைச்சலில் பெருக்கத்தைக் காண்பீர்கள். அதேசமயம் புழுபூச்சிகள் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சிறிது செலவு செய்ய நேரிடும். மேலும் சக விவசாயிகளுக்கு உங்களாலான உதவிகளைச் செய்வீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உபரி தொழில்களும் செய்ய முயற்சி செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் எந்தச் செயலையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்து வெற்றிகரமாக முடித்து விடுவார்கள். கட்சியில் அனுபவஸ்தர்களை கலந்து முக்கிய முடிவெடுப்பீர்கள். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே முன்ஜாமீன் போடவும். பயணங்கள் செய்து உங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்வீர்கள்.
கலைத்துறையினர் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். உங்கள் செயல்களில் சிறிய தடுமாற்றத்தைக் காண்பீர்கள். வெளியூர் நிகழ்ச்சிகள் நடத்தும்போது ரசிகர்களின் விருப்பங்களைக் கண்டறிந்து அவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் தடைகளுக்குப்பிறகே கிடைக்கும். பெண்மணிகள் கணவரிடமும் குடும்பத்தாரிடமும் நற்பெயர் வாங்குவார்கள். உடல்நலம் சீராக இருக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். ஆடை, ஆபரணங்களை வாங்குவார்கள். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். மாணவமணிகள்
நல்லபடியாக படித்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெற முடியும். மேலும் கடுமையாக உழைத்துப்படிக்கும் மாணவர்கள் சாதனை செய்வார்கள். உடல்நலம் சிறப்பாக அமையும். அதனை கூட்டிக் கொள்ள வெளிவிளையாட்டுகளிலும் உடற்பயிற்சிகளிலும் தவறாமல் ஈடுபடுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு இருப்பதால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேறக் காண்பீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

23 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top