மேஷம்
meshamமேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இந்த மன்மத ஆண்டில் உங்களுக்கு நெடுநாளாக தொடர்ந்து வந்த கவலைகள் நீங்கி மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகும். கொடூரமானவர்களின் பிடியில் சந்தர்ப்ப வசத்தால் மாட்டிக்கொண்டிருந்தவர்கள் தெய்வானுகூலத்தால் திடீரென்று விடுபடுவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு கிடைக்கும். உங்கள் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். எடுத்த காரியங்களை எடுத்தபடியே நிறைவேற்றுவீர்கள். உங்கள் செயல் திறன்கூடும். மன அழுத்தங்களில் இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். இழந்திருந்த கௌரவத்தை மறுபடியும் அடைவீர்கள். தவறான பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடுவீர்கள். விடாமுயற்சியுடன் உங்கள் காரியங்களைச் செய்வதற்கு உடலாரோக்கியமும் ஒத்துழைக்கும். குழந்தைகளை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.
குடும்பத்தின் தேவைகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். சிலர் புதிய வாகனங்களை வாங்குவார்கள். வழக்குகளிலும் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் திரும்ப கை வந்துசேரும். அடமானம் வைத்திருந்த நகைகளையும் மீட்டுவிடுவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள். அதேநேரம் அவர்களுக்காக உங்களின் கொள்கைகளைச் சற்று தளர்த்திக் கொள்ள நேரிடும். ஆலய திருப்பணிகளிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். செய்தொழிலில் உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மற்றபடி உங்கள் குறிக்கோளை எட்டிப் பிடிக்க கவனமாக உழைக்க வேண்டி வரும். நண்பர்களின் ஆலோசனை உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உடலாரோக்கியமும் மனவளமும் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். தன்னம்பிக்கையுடன் தைரியமாக பீடுநடைப் போடுவீர்கள். நெடுநாளாக பகைமை பாராட்டியவர்கள் சமாதான கொடிபிடிப்பர். அதனால் உற்சாகமிழந்த வாழ்க்கை உயிரோட்டமாக மாறும் ஆண்டாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். கடினமான வேலைகளையும் சரியாகத் திட்டமிட்டு முடித்துவிடுவீர்கள். மேலதிகாரிகள் உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். சக ஊழியர்களால் எந்த தொல்லைகளும் வராது. பணவரவும் சிறப்பாக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களைப் பெற முடியாமல் போனாலும் கிடைத்த மாற்றலை தள்ளிவிட வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடிவடையும். கூட்டாளிகள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவார்கள். வியாபாரத்தில் புதிய இலக்குகளை எட்டுவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். லாபம் அதிகரிக்கும். விளைபொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்ய முனைவீர்கள். கால்நடைகளுக்குச் செலவு செய்ய நேரிடும். நீர்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகளையும் நீங்கள் எடுக்கலாம்.

அரசியல்வாதிகள் வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சிப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பயணங்கள் நிறைய செய்ய வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் நல்ல வருமானத்தைப் பெற்றுத்தரும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். உங்களின் சமயோசித புத்தி வெளிப்படும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். அதேசமயம் உங்கள் குடும்ப பொறுப்புகளைச் சரிவர ஆற்றி வரவும். குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். மாணவமணிகள் இந்த ஆண்டு கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். மறதி ஏற்படாமல் இருக்க பாடங்களை விடியற்காலையில் எழுந்து படித்து மனப்பாடம் செய்யுங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்து கிடைக்கும். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.
பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும்.


புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க 

23 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top