கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முன்வைத்த காலை பின்வைக்காமல் சிறப்பாக பணியாற்றுவீர்கள். முந்தைய காலத்தில் அரைகுறையாக விட்ட காரியங்களைச் சிறப்பாக செய்து முடித்துவிடுவீர்கள். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். உடன்பிறந்தோரால் ஏற்பட்ட மன வருத்தங்களை வெளிகாட்டிக் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் வலம் வருவீர்கள். உற்றார் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். அவர்களுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்குகளில் அனாவசியமாக பலிகடாவாக ஆக்கப்பட்டிருந்தவர்கள், குற்றமற்றவர்கள் என்று விலக்கப்படுவார்கள். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். பங்குவர்த்தகம் மூலமும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குடும்பத்திலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு குறையாது, வளர்ச்சியுறும் காலகட்டமாக இந்த ஆண்டு அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையை காண்பார்கள். எதிர்வரும் இடையூறுகளை முறியடித்து வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். வருமானம் நல்லபடியாக இருக்கும். மேலதிகாரிகளால் எந்த கெடுதலும் வராது. அலுவலக ரீதியான பயணங்களால் வளர்ச்சி உண்டாகும். உங்கள் திறமைகளை கூட்டிக்கொள்ள பயிற்சிகளையும் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல்வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கூட்டாளிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வங்கிக் கடன்களும் தேவைக்கேற்ப கிடைத்துவிடும். விவசாயிகளுக்கு சுலபமாக காரியங்கள் நிறைவேறும். விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். மேலும் பயிர் விளைச்சலுக்கு செலவு செய்ய நேரிடும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய குத்தகைகளையும் நாடிச் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் முன்னேற்றங்களைக் காண்பார்கள். குழப்பங்கள் மறைந்து புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் செயல்களை பொறுப்புடனும் பொறுமையுடனும் செய்து மேலிடத்தின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். தொண்டர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டேனும் காப்பாற்றிவிடுவீர்கள். மேலும் பயணங்களால் வெற்றி கிடைக்கும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சியடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்களுக்குப்
பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் வரவேற்பும் அமோகமாக இருக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலையை காண்பார்கள். உற்றார் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதேசமயம் அனைவரிடமும் நியாயமாக நடந்து கொள்ளவும். புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவார்கள். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவார்கள். நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உற்சாகமாக இருப்பீர்கள்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.
புத்தாண்டு பலன்கள் சகல ராசிக்கும் இங்கே கிளிக் பண்ணுங்க
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.