Web Hosting
மேஷம்


மேஷம்: இன்றைய தினம் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை  அமையும். தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உழைப்பால் உயரும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். விருந்தினர்களின் வருகை உண்டு. அதிகார  பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.  


மிதுனம்


மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த  வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அதிரடி மாற்றம்  உண்டாகும் நாள்.  


கடகம்


கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். உதவி செய்கி றேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு  உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இடம் பொருள் ஏவல்  அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்


சிம்மம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆடம்பர  செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். தடைகளை  தாண்டி முன்னேறும் நாள்.


கன்னி


கன்னி: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். பிரியமானவர்களுக்காக  சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


துலாம்


துலாம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி  முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாறுபட்ட அணுகுமுறையால்  சாதிக்கும் நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். விலகி நின்ற வர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட  நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.


தனுசு


தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். தர்மசங்கடமான சூழ்நிலைகளில்  அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலை யாட்களின்  ஒத்துழைப்பு குறையும். நேர் மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


மகரம்


மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக  முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.  


கும்பம்


கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக் காக சில செலவுகள் செய்து  பெருமையடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியா பாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


மீனம்


மீனம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி யும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை  கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.

25 Apr 2015

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top